சிறுத்தை கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள குமணன்தொழு கிராமத்தில்விவசாயியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் ஆடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பாண்டி பால் கறப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது 3 ஆடுகள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டி உடனடியாக வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் ஆடுகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது. இந்த பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. அதேபோல் இந்த ஆடுகளும் சிறுத்தை தாக்கி உயிரிழந்து இருக்கலாம். எனவே பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.