ஒற்றைக்காலில் 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால் 10 வருடங்களில் உயிர் இழக்க கூடிய அபாயம் உள்ளது என புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை போன்றவற்றிற்கு இடையே தொடர்பு பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதன்படி கடந்த 2008ஆம் வருடம் ஆய்வு தொடங்கியது. ரியோ டி ஜெனிரோ சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ தலைமையிலான ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் 51 முதல் 75 வயது வரையிலான 1202 பேர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் 2020 ஆம் வருடம் வரை 12 வருடங்கள் ஆய்வு நடந்து அதன் முடிவுகள் பெறப்பட்டுள்ளது.
அதில் முதியோர்களுக்கு மேற்கொள்ளும் பரிசோதனையில் சமநிலை பரிசோதனையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென அவர்கள் தெரிவிக்கின்றனர். அது என்ன சமநிலை பரிசோதனை..? அதாவது இந்த ஆய்வில் கலந்து கொள்பவர்கள் இடம் முதலில் உங்களது ஒரு காலை மேலே தூக்குங்கள் என கூறப்பட்டிருக்கிறது. அதனை மற்றொரு காலின் கீழே பின்பக்கத்தில் வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் கைகள் இரண்டும் ஒரு பக்கங்களில் தளர்வாக விடப்பட்டு நேராக பார்க்கும்படி அவர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆய்வில் கலந்து கொண்டோருக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் 5ல் ஒருவர் தோல்வி அடைந்திருக்கிறார்.
அடுத்த பத்து வருடங்களில் ஆய்வில் கலந்துகொண்ட 123 பேர் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்திருக்கின்றனர். வயது, பாலினம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை பரிசீலித்து அதன் அடிப்படையில் ஒரு காலில் ஆதரவின்றி 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால் ஒரு தசாப்தத்தில் அவருக்கு மரணம் ஏற்படக் கூடிய ஆபத்து 85 சதவிகிதம் உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.