Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : உச்சம் தொடும் OPS-EPS மோதல்…… பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் தற்போது அரசியல் ஹாட் டாப்பிக்காக அதிமுக பிரச்சினைதான் வலம் வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து விட்டனர். நேற்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு பின்னர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக அலுவலகங்களில் உள்ள ஓபிஎஸ் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இபிஎஸ் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்களது பலத்தை நிரூபிக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. கட்சியை கட்டி காக்க தலைவர்களில் ஒருவர் விட்டுக் கொடுப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |