Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கீழே கிடந்த செல்போன்…. நேர்மையாக செயல்பட்ட மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!

கீழே கிடந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவியை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில் செல்போன் ஒன்று கீழே கிடந்துள்ளது. இதனை அதே பகுதியில் வசிக்கும் 6-ஆம் வகுப்பு படிக்கும் கௌசல்யா என்ற மாணவி பார்த்துள்ளார். இந்நிலையில் மாணவி அந்த செல்போனை எடுத்து காரியாபட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். நேர்மையாக செயல்பட்ட மாணவியை காரியாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். இதனை அடுத்து செல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |