மனைவியின் வளைகாப்புக்கு சென்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னகவுண்டம்பாளையத்தில் பிரபு(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி(27) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான புவனேஸ்வரிக்கு ஆமணக்கு நத்தத்தில் இருக்கும் அவரது பெற்றோர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபு திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரபுவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.