வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை மிரட்டிய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள காட்டுபாளையத்தில் திருநாவுக்கரசு(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநாவுக்கரசு மகாலட்சுமி(25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருநாவுக்கரசு, அவரது தாயார் மணிமேகலை, உறவினர் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து மகாலட்சுமி கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.