Categories
தேசிய செய்திகள்

‘கொரோனாவா… எங்களுக்கா…!’ – மானேசரி முகாமில் மாணவர்கள் கும்மாளம்… வைரலாகும் வீடியோ..!!

கொரோனா வைரஸின் எதிரொலியாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள், தங்களுக்கென்று இந்திய ராணுவத்தின் சார்பில் ஒதுக்கப்பட்ட தனி முகாமில் ஆடி, பாடி மகிழ்ந்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் என்னும் தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற சீனா அரசிடம் இந்திய வெளியுறவுத் துறை அனுமதி கோரியது.

Image result for Indian students who were brought back from Wuhan, China, dance at the quarantine facility of Indian Army in Manesar, Haryana, where they are currently lodged."

இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் தனி விமானங்கள் மூலம் நாடு திரும்பினர். அவர்களுக்கென்று இந்திய ராணுவம், ஹரியானாவுக்கு அருகே உள்ள மானேசரில் தனி முகாமை ஏற்படுத்தியுள்ளது.

Image result for Indian students who were brought back from Wuhan, China, dance at the quarantine facility of Indian Army in Manesar, Haryana, where they are currently lodged."

300 படுக்கை வசதிகளுடன் இந்த முகாமில் அவர்களுக்கு விரிவான பரிசோதனைகள் நடத்தப்படும். இந்த முகாமில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் தங்கும் அவர்களில் யாருக்காவது வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்படுவர்.
Image result for Indian students who were brought back from Wuhan, China, dance at the quarantine facility of Indian Army in Manesar, Haryana, where they are currently lodged."

இந்நிலையில் மானேசரி முகாமில் தங்கியுள்ள இளைஞர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனி அறைகளில் ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Categories

Tech |