இலங்கை போன்று பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் வளர்ச்சித்துறை அமைச்சர், பொதுமக்கள் குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். டீ குடிப்பதற்கும் பொருளாதாரத்திற்கு என்ன சம்பந்தம் என இணையதளத்தில் பலரும் அவர் பேசிய வீடியோவை பகிர்ந்து கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில் தேயிலை இறக்குமதி செலவை குறைக்கும் விதமாக தேநீருக்கு பதிலாக லெஸ்ஸி, சர்பத் போன்ற பானங்களை குடிக்கும்படி மக்களுக்கு அந்நாட்டு உயர் கல்வி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.