Categories
உலக செய்திகள்

துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம்…. சட்ட மசோதாவில் கையெழுத்திட்ட ஜோ பைடன்….!!

அமெரிக்கா நாட்டில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, 21 வயதிற்குட்பட்டவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது மனநல  ஆலோசனைக்காகவும், பள்ளிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது (இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்றவைக்கு இந்த மசோதா வழிவகை செய்கின்றது. இந்த செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா மீது நடந்த ஓட்டெடுப்பில், 65 ஓட்டுகளுடன் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றியது.

இதனை தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர்  அதிபர் ஜோ பைடனின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார். பின்னர் கூடிய சீக்கிரத்தில் இந்த சட்டம்  அமலுக்கு வரும் என்றும் இந்த மசோதாவை சட்டமாக மாற்ற அதிபர் ஜோ பைடன் கையெழுத்தி்ட்டுள்ளார்  பின் அவர் கூறியதாவது “இந்த சட்டம் நிறைய உயிர்களைக் காப்பாற்றப் போகிறது, அதில் கடவுள் சித்தமாக இருக்கிறார்” என்று கூறினார். மேலும் இதன்மூலம், அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மிகவும் முக்கியமான துப்பாக்கி கட்டுப்பாடு சட்டமாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |