தமிழ்நாட்டில் அடுத்த மாதம் நடக்கும் சர்வதேச 44-ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விலகிக் கொள்வதாக சீனா அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 28-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரை சர்வதேச 44-ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவிருக்கிறது. இதில் சுமார் 187 நாடுகளில் இருந்து 2500 க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இப்போட்டியில் கலந்துகொள்ள இருந்த சீன அணி தற்போது போட்டியிலிருந்து விலகுவதாக கூறியிருக்கிறது.
அதற்கு என்ன காரணம்? என்று தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு சீன அணி கடந்த 2014 மற்றும் 2018 ஆம் வருடங்களில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தங்கம் வென்றது. சீன நாட்டின் மகளிர் அணி இந்த இரு தொடர்களிலும் தங்கம் வென்றது. இந்நிலையில் தற்போது சீனா இந்த போட்டியில் விலகிவிட்டது.
அதேநேரத்தில், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து இருப்பதால் ரஷ்ய நாட்டிற்கு இதில் கலந்து கொள்ள தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.