அ.தி.மு.க அரசை அமைச்சர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் உயிரி வேதியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த சர்வதேச மாநாடு கருத்தரங்கில் மருந்து கண்டுபிடிப்பு மற்றும் உயிரி தொழில்நுட்பம் குறித்து பேசப்பட்டது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், தமிழகத்தில் அ.தி.மு.க கட்சியானது நல்ல தலைமை இல்லாததால் கேப்டன் இல்லாத கப்பல் போன்று ஆகிவிட்டது என்றார். அவர்களுக்கு கொள்கை மற்றும் கோட்பாடுகள் இல்லை எனவும், நிரந்தர தலைமை இல்லாமல் அவல நிலைக்கு ஆளாகி உள்ளது எனவும் கூறினார்.
அதன்பிறகு அ.தி.முக. பொதுக் குழுக் கூட்டத்தின் போது அமைச்சர் சி.வி சண்முகம் நடந்துகொண்டது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என்றும் அதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு விருப்பம் கிடையாது என்றும் கூறினார். இந்நிலையில் தி.மு.க கட்சி முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நல்ல சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்குகிறது எனவும், மக்களுக்கு வேண்டிய நல்ல விஷயங்களை எல்லாம் செய்து வருகிறது எனவும் கூறினார். இதனால் அ.தி.மு.க கட்சியில் நடப்பவற்றையெல்லாம் பார்த்து மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். இதனை அடுத்து அ.தி.மு.க கட்சியில் நல்ல தலைமை இல்லாத காரணத்தினால் மட்டுமே அங்கு பல்வேறு பிரச்சனைகள் நடக்கிறது.
அதன் பிறகு பா.ஜ.க கட்சியை பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை எனவும், பா..ஜக அரசுக்கு தமிழகத்தில் இடமில்லை எனவும் கூறினார். ஏனெனில் தமிழகமானது திராவிடத்தை முன்னெடுக்கின்ற மாநிலம் என்பதால். பா.ஜ.க கட்சிக்கு இடமில்லை என்றார். இதனையடுத்து பா.ஜக. கட்சியை நம்பி செல்பவர்கள் மண் குதிரையில் ஏறி ஆற்றுக்குள் இறங்கி செல்வதற்குச் சமம் என்றார். மேலும் பா.ஜ.க ஒரு மிகப்பெரிய மண்குதிரை என்றும், அதில் சேர்பவர்களுக்கு அனைவருக்கும் கண்டிப்பாக ஆபத்து மட்டுமே நேரிடும் என்றும் கூறினார்.