திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளதால் வழக்கம்போல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகளை நாளை முதல் ஆன்லைனில் பெறலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் கட்டண பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நாளை மாலை 4 மணி முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளுக்கு முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு அது குறித்து தகவல்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே செப்டம்பர் மாதம் திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் டிக்கெட்டு களை பெற்றுக்கொள்ளலாம்.