Categories
உலக செய்திகள்

இந்திய கடல் பகுதியில்….. அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள்…. எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி….!!!

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 2 பேரை பாதுகாப்பு படையினர் பிடித்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத்தின் கட்ச் பகுதியில் ஹரமி நல்லா கடற்கழி பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் 9 படகுகள் கடலில் சுற்றிக் கொண்டிருந்தது. இவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். உடனே படகில் இருந்த பல மீனவர்கள் கடலில் குதித்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் 2 பேரை மட்டும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். மேலும் பிடிபட்ட 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |