Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் வேலை வாங்கி தருகிறேன்”… பட்டதாரி வாலிபர்களிடம் 50 லட்சம் மோசடி… போலீசார் தீவிர தேடல்….!!!!!!!!

வேலை வாங்கி தருவதாக பட்டதாரி இளைஞனிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் என்னும் பகுதியை சேர்ந்த தன்யா கருணாநிதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தன்யா கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இவர் தன்னிடம்  அறிமுகமான நபர்களிடம் கோவை  இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. பணம் தந்தால் அதில் வேலை வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி சூளுரை சேர்ந்த முருகன்(25) என்பவர் டிரைவர் பணிக்காக பல லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு போலியான நியமன ஆணை வழங்கியதாக தெரிகின்றது.

இதனை வைத்து வேலையில் சேர முயற்சி செய்தபோது அது போலி என தெரியவந்தது. இந்த நிலையில் இதுபற்றி முருகன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதில் பணம் கொடுத்து ஏமாந்த சிலர் தங்களது பணத்தையும் சான்றிதழ்களையும் திரும்ப கேட்டு வந்திருக்கின்றனர். இதற்கிடையே தன்யாவும் அவர் கணவருடன் வீட்டை காலி செய்து சரவணம்பட்டி சென்றுள்ளார். அங்கே அவரது வசிப்பிடத்தை கண்டறிந்த பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை முற்றுகை இட்டுள்ளனர். அதனால் அங்கே சரவணம்பட்டி போலீசார் விசாரணைக்கு சென்றுள்ளனர். அப்போது தன்யா தான் கொலை செய்யப் போகிறேன் என வீட்டில் கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை எதுவும் செய்யாமல் விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று சூளுரை சேர்ந்த நவ்பல் மற்றும் சரவணகுமார், நந்தகுமார், சுரேந்திரன், தேவராஜ், விக்னேஷ், அகிலன், கோகுல், ரஞ்சிதா போன்றோர் தன்யா மற்றும் அவரது கணவர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் மோசடி புகார் அளித்துள்ளனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது விசாரணையில் இவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 50 லட்சம் வரை தன்யா மற்றும் அவரது கணவர் மோசடி செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேர் மீது மோசடி ஏமாற்றுதல் பிரிவு கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் போலீஸ் தேடுவதை அறிந்த கணவன் மனைவி இரண்டு பேரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Categories

Tech |