Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி… அதிரும் அதிமுக தலைமை … பதறும் எடப்பாடி டீம் …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம்  நீதிமன்ற உத்தரவின் பேரில்  நிறைவேற்றப்படவில்லை. வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என  நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படது.

இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரதமருடன் சென்று விட்டு நேற்று சென்னை திரும்பி இன்று, தேனி மாவட்டம் பெரியகுளம் அவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்திருக்கிறார்.

மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புரட்சி தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுடைய உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் உயிரான தொண்டர்களுடன் என்றும் நான் இருப்பேன். அதிமுகவில் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனை பெற்றது என்னுடைய பாக்கியம் என்று அம்மா அவர்கள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

இதைவிட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது ? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதற்கு  விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி மாண்புமிகு  அம்மா அவர்களின் தொண்டர்கள்  உரிய பாடத்தை, தண்டனையை வழங்குவார்கள் என்று தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |