Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி அலுவலகம்… திடீர் தாக்குதலால் பரபரப்பு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் திடீரென காங்கிரஸ் எம்.பியின் கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை காங்கிரஸ் கட்சியும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சிலர் அமர்ந்து இருக்கும் போது திடீரென வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் கைகளில்  கொடிகளை ஏந்தி கொண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கட்சி அலுவலகத்திற்குள் ஏறி குதித்து தாக்குதல் நடத்தினர் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |