கடந்த 1969 ஆம் வருடம் அப்பல்லோ 11 பயணத்தின்போது 47 பவுண்டுகள் (21.3 கிலோ கிராம்) நிலாவின் பாறையை மீண்டுமாக பூமிக்கு கொண்டுவரப்பட்டது. இப்பாறை மண் சில பூச்சிகள், மீன்கள் மற்றும் பிற சிறிய உயிரினங்களுக்கு உணவளிக்கப்பட்டது. இதனிடையில் சந்திரனின் மண் அதை கொல்லுமா என பார்க்கப்பட்டது. இதையடுத்து நிலவினுடைய தூசியை ஊட்டப்பட்ட கரப்பான்பூச்சிகள் மின சோட்டா பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின் அங்கு பூச்சியியல் நிபுணர் மரியன் புரூக்ஸ் அவற்றைப் பிரித்து ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் கூறியதாவது “தொற்று இருப்பதற்கான எந்த ஆதாரமும் நான் பார்க்கவில்லை.
சந்திரனின் பொருள் நச்சுத் தன்மை வாய்ந்தது (அல்லது) பூச்சிகளில் வேறு ஏதேனும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என புரூக்ஸ் கூறினார். எனினும் நிலவுபாறை மற்றும் கரப்பான்பூச்சிகள் நாசாவுக்கு திரும்பவரவில்லை. அவற்றிற்கு பதில் புரூக்ஸின் வீட்டிலேயே இருந்தது. புரூக்ஸ் இறந்த பின் அவரது மகள் கடந்த 2010ல் அவற்றை விற்றார். தற்போது அவை வெளியிடாத ஒரு அனுப்புநரால் RR ஏல நிறுவனத்தின் வாயிலாக மீண்டுமாக விற்பனைக்கு வந்துள்ளது.
அதனை தொடர்ந்து அப்பல்லோ 11 பயணத்தின்போது சேகரிக்கப்பட்ட நிலவின் மண் விற்பனையை நிறுத்தும்படி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பாஸ்டனை தளமாகக்கொண்ட RR ஏல நிறுவனத்திடம் கேட்டுள்ளது. “இப்பொருட்களின் சேகரிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அப்பல்லோ மாதிரிகளும் நாசாவைச் சேர்ந்தவை ஆகும். அத்துடன் ஆய்வு, அழிப்பு (அல்லது) பிற பயன்பாட்டிற்குப் பின், குறிப்பாக விற்பனை (அல்லது) தனிநபருக்குப் பிறகு அவற்றை வைத்திருக்க எந்த நபருக்கும், பல்கலைக்கழகத்திற்கும் (அல்லது) பிற நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை” என்று நாசா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதன்பின் “அப்போல்லோ 11 சந்திர மண் பரிசோதனை (கரப்பான் பூச்சிகள், ஸ்லைடுகள் மற்றும் அழிவுக்குப் பிந்தைய சோதனை மாதிரி) உடைய அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏல செயல்முறையை உடனே நிறுத்துங்கள். அதை எங்களிடம் கொடுத்து விடுங்கள்” என நாசா குறிப்பிட்டு உள்ளது. சுமார் 40 மில்லி கிராம் நிலவின்மண் மற்றும் அதனை உண்ட 3 கரப்பான்பூச்சி சடலங்கள் உடைய ஒருகுப்பியை உள்ளடக்கிய சோதனையின் பொருள், குறைந்தபட்சமாக $400,000க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் நாசாவின் கடிதத்தை தொடர்ந்து ஏலத் தொகுதியில் இருந்து அது நீக்கப்பட்டது. பின் “நாங்கள் இதற்கு முன்னதாக நாசாவுடன் பணிபுரிந்தோம். அத்துடன் அமெரிக்க அரசாங்கம் பொருட்களுக்கு உரிமைகோரும் போது எப்போதும் ஒத்துழைத்தோம். இறுதியில் நாங்கள் சட்டப்பூர்வமாக செயல்பட விரும்புகிறோம்” என RR ஏல நிறுவனத்தின் வழக்கறிஞர் ஜைட் தெரிவித்தார்.