சுவர் இடிந்து கார்கள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணார்பேட்டை பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தின் சுவர் அருகே பலர் தங்களது வாகனங்களை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்துள்ளது.
இதில் 3 கார் அப்பளம் போல் நெருங்கியுள்ளது. அப்போது அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.