Categories
அரசியல் மாநில செய்திகள்

கைதாகிறார் வேலுமணி?…. வசமாக சிக்கும் மாஜி அமைச்சர்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை…..!!!!

கடந்த ஆட்சியில் மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்ட வழக்கில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது செய்யப்படலாம் என லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.. இது தொடர்பாக புகாரில் வழக்குப் பதிந்து அவரது வீடு,அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பல முக்கிய ஐஏஎஸ் அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் வேலுமணி மீதும் கைது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. அவரது பதவிக் காலத்தில், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஐ.ஏ.எஸ்.,கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது, வழக்கு பதிவு செய்து, ‘காப்பு கட்ட’ லஞ்ச ஒழிப்புத் துறை தயாராகி வருகிறது. அதற்கு அனுமதி கேட்டு, அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. அதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.இந்த தகவல் வேலுமணி தரப்பில் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |