Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் வீட்டை மீட்டு தர வேண்டும்”…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. சென்னையில் பரபரப்பு….!!!

காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் பகுதியில் வத்சலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன், ராமமூர்த்தி என்ற 2  பேர்   இவரது  வீட்டின் அசல் பத்திரங்களை வாங்கி போலி பத்திரம் தயாரித்து வங்கியில் 1  கோடி ரூபாய் கடன் பெற்றனர். ஆனால் அவர்கள் கடனை கட்ட வில்லை.  இதனால் வங்கி அதிகாரிகள்   வத்சலாவின்  வீட்டை ஏலம் விட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து வத்சலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை  காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்  ஆத்திரமடைந்த  வத்சலா  காவல் நிலையம் முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |