காட்பாடி மெட்டுகுலம் கிராமத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியபோது, பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தால் தமிழக அரசிற்க்கு நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகின்றது. இருந்த போதிலும் தமிழக அரசு அதனை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் எம்எல்ஏவாக இத்தனை வருட காலம் இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் என்னிடம் இல்லை. அப்படித்தான் எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் பேசும்போது காவிரி நதிநீர் கமிஷனில் மத்திய அரசு முன்னணியில் இருப்பது மாதிரியும் பின்னணியில் இருப்பது போலவும் இருக்கிறது.
மேலும் கர்நாடக அரசு சொல்வதும் தவறு காவிரி மேலாண்மை கமிஷன் சொல்வதும் தவறு. சுற்றுச்சூழல் துறை மேகதாது அணை விவகாரத்தை நீக்கி இருக்கிறது மகிழ்ச்சியளித்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி ஆம்பூர் வந்து தங்க இருக்கின்றார். 29 ம் தேதி திருப்பத்தூர் விழாக்களில் கலந்துகொள்கிறார். அதன்பின் வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். மேலும் நல திட்டங்களை வழங்குகிறார். இந்த நிலையில் மறுநாள் ராணிப்பேட்டையில் விழாவை முடித்துவிட்டு சென்னை செல்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு முடிவு செய்து யஷ்வந்த் சின்காவை ஆதரிக்கின்றோம். மேலும் சமூக நீதியில் திமுக ஈடுபாடு உள்ள கட்சி ஆனால் பழங்குடி இன வேட்பாளரை ஆதரிக்க வில்லை என தெரிவிக்கின்றார்கள். இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நாங்கள்தான் இரண்டாவது பெரிய கட்சி எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.