ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தேசிய கல்வியை விட தமிழகத்தின் கல்வி முறையில் படிப்பவர்களின் கல்வியானது உயர்ந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவோம் என்கிறார்கள். நுழைவுத் தேர்வு வைத்து பாஜக எப்படியாவது நுழைய முயற்சிக்கிறது. பாஜகவை நுழைய விடாமல் இருப்பது மாணவர்களின் கையில் தான் இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories