தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,500சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்பும் தமிழக அரசின் அறிவிப்பு அப்பட்டமான உழைப்பு சுரண்டல் மட்டுமின்றி அறிவு சுரண்டலும் ஆகும்.
மேலும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் வாய்ப்புள்ளது என சீமான் தெரிவித்துள்ளார். எனவே தற்காலிக ஆசிரியர் நியமன உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.