Categories
மாநில செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி விலை என்ன….? அமைச்சர் புதிய தகவல்…. பொதுமக்களுக்கு செம ஹேப்பி நியூஸ் ….!!!!!!

தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு அரசு துணை சுகாதார நிலையம் நல வாழ்வு மையத்தில் உள்ள சிகிச்சை கூடங்கள் மற்றும் ஆய்வகங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி அமைச்சர்கள் கேட்டறிந்தனர். மேலும் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலமாக பயன்பெறும் பயனாளிகளுக்கு மருந்து உபகரணங்களையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கியுள்ளார்.

இந்த ஆய்வு நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இதன்பின் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் போன்ற சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் மக்கள்தொகை மற்றும் அருகில் உள்ள அரசு சுகாதார நிலையங்கள் போன்றவற்றை கணக்கீடு செய்து விரைவில் துணை சுகாதார நிலையங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆக மாற்றப்படும். தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் தற்போது மற்ற மாநிலங்களில் பி4, பி5 வகைகள் இரட்டிப்பு வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. சட்டம் போட்டு தான் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கிடையாது. மக்கள் விழிப்புணர்வுடன் அவரவர் தங்களது நலன் கருதி அனைவரும் தானாக முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பில் இருக்கிறது என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடன் விழுப்புரம் மாவட்ட பாஜக வின் தலைவர் ஏ டி ராஜேந்திரன் மற்றும் மரக்காணம் ஒன்றிய பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

Categories

Tech |