Categories
உலக செய்திகள்

ரஷ்ய பொருட்களின் போக்குவரத்துக்கு தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

கலினின்கிராட் வழியே ரஷ்ய பொருட்களின் போக்குவரத்தில் எவ்வித சலுகைகளையும் வழங்க முடியாது என லிதுவேனியா தெரிவித்துள்ளது.

அண்டை நாடான கலினின்கிராட் வழியே ரஷ்ய பொருட்களின் போக்குவரத்தை தடை செய்வதில் எவ்வித சலுகையும் வழங்க லிதுவேனியா மறுத்துவிட்டது. இது ரஷ்யா-நேட்டோ இடையிலான மோதலை தூண்டக்கூடிய ஒரு விரிவாக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பால்டிக் கடலில் உள்ள கலினின்கிராட், லிதுவேனியா வழியே ரஷ்யாவிற்கான ரயில் இணைப்பையும் பரவலாகப் பயன்படுத்துகிறது. ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்கி செயல்படும் லிதுவேனியா, ரஷியாவின் ஸ்டீல் மற்றும் பிற இரும்பு உலோகங்களின் போக்குவரத்தை தடை செய்து ரயில் பாதையை தடுத்துள்ளது.

எனினும் இந்த நடவடிக்கையானது பயணிகளுக்கான ரயில் மற்றும் சரக்குகளை பாதிக்காது என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்தார். இதனிடையில் லிதுவேனியாவின் அதிபர் கிடானாஸ் நவ்சேடா கூறியதாவது “ஐரோப்பிய ஒன்றியத்தில் லிதுவேனியா இணைந்த 2004 முதல் கலினின்கிராட் போக்குவரத்து சுதந்திரமாக இயங்குகிறது. பின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லிதுவேனியாவும் இணைந்து செயல்படுகிறது. அத்துடன் ரஷ்யாவிற்கு எதிரான 4வது கட்ட பொருளாதாரத் தடைகளை செயல்படுத்துவதில் தீவிரமாக பங்கேற்றுள்ளது.

லிதுவேனியா எல்லை வழியே கொண்டு செல்லப்படும் பொருட்களின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்க நாங்கள் எப்போதும் வேண்டும். அதுமட்டுமின்றி ரஷ்யாவிற்கு சலுகைகள் வழங்கவோ மற்றும் அந்நாட்டின் பொருட்களை கொண்டு செல்ல பாதுகாப்பான வழித்தடங்கள் அமைப்பது பற்றியோ பேச்சுவார்த்தை நடத்த முடியாது” என லிதுவேனியாவின் அதிபர் கிடானாஸ் நவ்சேடா தெரிவித்தார். இது தொடர்பாக ரஷ்ய தரப்பில் கூறியிருப்பதாவது, இது வருந்தத்தக்கது. அவர்கள் இனிமேல் எங்கள் கூட்டாளிகள் கிடையாது. அவர்கள் தற்போது எங்கள் எதிரிகள், நாங்கள் பொறுத்திருந்து நல்ல முடிவை எடுப்போம் என தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |