தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள், வழிகாட்டுதல்களை கடை பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். முக கவசம் அணியாமல் இருத்தல் போன்ற காரணங்களால் தொற்று அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளது.