Categories
அரசியல் மாநில செய்திகள்

தொண்டர்கள் விருப்பம்…. எனது தலைமையில் அதிமுக…. சசிகலா பரபரப்பு பேட்டி….!!!!!

அதிமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று சென்னையிலிருந்து திருத்தணி சென்று சசிகலாவிற்கு பல்வேறு இடங்களில் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த சசிகலா, அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது. இது நிச்சயம் சரிசெய்யப்படும். இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை. இதை நாங்கள் சரி செய்வோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரு தலைமையின் கீழ் அதிமுக நிச்சயம் வரும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |