சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆண்டுதோறும் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் நடப்பாண்டிலும் மண்டல அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நியமிக்கப்பட்டுள்ள 15 அதிகாரிகளின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
அதன்படி சோழிங்கநல்லூர் மண்டலத்தில் வீரராகவராவும், அடையாறு மண்டலத்தில் நிஷாந்த் கிருஷ்ணாவும், ஆலந்தூர் மண்டலத்தில் நந்தகோபாலும், வளசரவாக்கம் மண்டலத்தில் மணிகண்டனும், கோடம்பாக்கம் மண்டலத்தில் விஜயலட்சுமியும், தேனாம்பேட்டை மண்டலத்தில் ராஜமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்பிறகு அண்ணா நகரில் பழனிச்சாமியும், அம்பத்தூரில் சுரேஷ்குமாரும், திருவிக நகரில் ரஞ்சித் சிங்கும், ராயபுரத்தில் விஜய கார்த்திகேயனும், தண்டையார்பேட்டையில் வினையும், மாதவரத்தில் சந்தீப் நந்தூரியும், மணலியில் கணேசனும், திருவொற்றியூரில் சரவணகுமார் ஜவாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.