ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வி.ஏ.கே நகர் பகுதியில் காளியம்மன் கோவில் வளாகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது சங்கத்தில் இருந்து ஓய்வு பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மேலும் கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படி உடன் சேர்த்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.