நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரி செய்யப்படும்.
இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை இதை நாங்கள் சரி செய்வோம். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு தலைமையின் கீழ் அதிமுக நிச்சயம் வரும். அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள்” என்று கூறினார். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2வது முறையாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை நிச்சயம் சரிசெய்ய முடியும் எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.