கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி பகுதியில் சந்தோஷ் குமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மாதேஸ்வரன் என்பவரிடம் 4 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 3 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ளார். கடந்த ஒரு ஆண்டாக சந்தோஷ்குமார் வட்டி கொடுக்கவில்லை.
இந்நிலையில் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மாதேஸ்வரன் சந்தோஷ் குமாரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சந்தோஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மாதேஸ்வரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.