Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடையை நடத்த முடியவில்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மளிகை கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை எழுந்தன் கோட்டு கோணத்தில் பகவத்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஆஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் குமாரால் கடையை சரியாக நடத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |