ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார்.
முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் – சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பது இதுவே முதல்முறையாகும், இந்த படத்தை பி. ஸ்டாலின், ஜேபிஆர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஹர்பஜன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் படம் குறித்த மேற்படி தகவல்கள் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம்,இணைய தொடர்.இன்று #SeantoaStudio #CinemaaStudio தயாரிக்கும் #FriendShip படத்தின் நாயகன்.#தமிழ் மக்களுக்கு நன்றி.திருக்குறள் டூ திரைப்பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் #தலைவர் #தல #தளபதி சின்னாளப்பட்டி சரவணன்-@ImSaravanan_P அசத்துவோம் @JPRJOHN1 pic.twitter.com/Z5pePt7R72
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 2, 2020