தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடிக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் தாணு நானே வருவேன் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” சரித்திரம், சாதனை, சகாப்தம் படைத்த படங்களுக்கு மேலான ஒரு இடத்தில் நானே வருவேன் படமும் அந்த பட்டியலில் இடம்பெறும். உலகமெங்கும் பெரிய வைப்ரேஷன் உருவாக்கும் படைப்பை படைத்து இருக்கிறார் செல்வராகவன். தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். சொல்லக்கூடாது, இதுவரை நடிக்காத ஒரு படைப்பு என கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.