அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கூலித் தொழிலாளியான ரமேஷ்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரமேஷ் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் ரமேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று ரமேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.