துனிசியாவில் அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த எட்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துனிசியா நாட்டில் அதிபர் கெய்ஸ் சையது மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைப்புக்கு உளவு துறை தகவல் கொடுத்துள்ளது. இந்த தகவலால் பாதுகாப்பு பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது, “துனிஸ் நகருக்கு வடக்கே கிராம் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 2 பெண்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் அந்த பகுதிக்கு சென்று அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தொடர்ச்சியாக, ரகசிய அறை ஒன்றில் வேறு 6 பெண்கள் மறைந்திருப்பது தெரிய வந்ததுள்ளது.
மேலும் அவர்கள் அனைவரும் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து 8 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து 24 மணிநேரத்தில் காவல்துறையினர் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.