Categories
Tech டெக்னாலஜி

பெண்களுக்கு குஷியான அறிவிப்பு…. WhatsAppல் வேற லெவல் அப்டேட் வெளியீடு…!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளிகள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் அவ்வப்போது வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியத்தை கண்காணித்து தகவல் வழங்கும் புதிய வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது.

9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸ்அப் வணிக கணக்கிற்கு பெண்கள் Hi என்று மெசேஜ் செய்ய வேண்டும். அத்துடன் தங்களது கடைசி மாதவிடாய் தேதியை பதிவிட வேண்டும். பின்னர் மாதம்தோறும் மாதவிடாய் காலத்தை வாட்ஸ்அப் நினைவு படுத்தும். இந்த புதிய அப்டேட் முதற்கட்டமாக whatsapp பிசினஸில் வருகிறது. இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.மேலும் இது ஒரு சாட்பாட்டில் (கணினி கட்டமைப்பு) இயங்குகிறது. சிரோனாவின் இந்த முயற்சி பெண்களுக்கு மிகுந்த பயனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |