தமிழ் சினிமாவில் நடிகைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து நடிகை பிரியாமணி மனம் திறந்து பேசியுள்ளார். நான் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் எனக்கு தமிழில் மிகவும் சவாலாக இருந்த படங்கள் பருத்திவீரன், சாருலதா மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என இவை மூன்றையும் சொல்வேன். சினிமாவில் வெள்ளையாகவும் ஒல்லியாகவும் தான் கதாநாயகி இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. முன்பெல்லாம் இது எதுவும் இல்லாமல் தான் இருந்தது.
ஆனால் பாலிவுட் நடிகைகளுக்கு உடல்வாகு கட்டுக்கோப்பாகவும், நிறம் வெண்மையாகவும் இயற்கையிலேயே இருக்கும். இது தற்போது தமிழ் சினிமாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்க தொடங்கியது. தமிழகத்தில் அப்படி கிடையாது. அதனை புரிந்து கொள்ளாமல் அந்த நெருக்கடி நிலைக்கு தமிழ் கதாநாயகிகள் தள்ளப்பட்டார்கள். ஆனால் தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்று பிரியா மணி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.