தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று தலை எப்படி எளிதாக சமர்ப்பிக்கலாம் என்பது பற்றி அரசு அறிவுரை வழங்கியுள்ளது. பொதுவாக வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஒரு சான்றாகும். அதனை ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி அவர்கள் சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து அவர்களுக்கு பென்ஷன் கிடைக்கும். ஆனால் கொரோனா காலத்தில் ஓய்வூதியதாரர்களின் நலனை கருதி வாழ்நாள் சான்றிதழ் பெறுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொருந்தும். ஜீவன் பிரமான் (https://jeevanpramaan.gov.in/) இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
[8:27 AM, 27/6/2022] Nanthini Nandi: அஞ்சல் துறை:
ஓய்வூதியதாரர்கள் இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி தங்கள் இருப்பிடத்திலிருந்து கொண்டு தபால் துறை பணியாளர்கள் மூலமாக 70 ரூபாய் கட்டணம் செலுத்தி மின்னல் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
இ சேவை மையம்:
தமிழக அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலமாக ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம்.
மேலும்ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்
கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இல்லாமல் ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்துகொண்டே மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியதாரர் வழங்க வேண்டிய முக்கிய விவரங்கள்:
ஆதார் எண்
P.P.O. No.
வங்கி கணக்கு எண்
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்
இதனைத் தவிர ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒரு அலுவலரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.
- ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது)
- அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது)
- வட்டாட்சியர்/துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
இதனைத் தவிர ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் அல்லது கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல் துறை, தொழிலாளர் வைப்பு நிதி திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள்,உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு எதுவும் பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.