Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி தான் கிங்கு…. ஒரு போதும் பின்வாங்க மாட்டார்… அம்மாவின் தெய்வ வாக்கை நிறைவேற்றுவோம்… !!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நாம் இன்னும் பின்தங்கியே சென்றிருந்தால் அம்மாவின் கனவு…. ”எனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகள் இந்த அன்னை தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சொன்னாரே”… , நம் தெய்வ தலைவி,  அம்மாவின் லட்சிய வாக்கை, தெய்வ வாக்கை நிறைவேற்றும் பொறுப்பும், கடமையும் 1 1/2கோடி தொண்டர்களுக்கும் இருக்கிறது. ஆகவே இதில் ஒரு சீர்திருத்தம்  செய்ய வேண்டும்.

நிர்வாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தொண்டர்களுடைய கருத்தை, மாவட்ட கழக செயலாளர் உடைய கருத்தை அங்கே கேட்கின்ற போது அனைவரும் ஒரு கருத்தை முன்வைக்கின்றார்கள். நிச்சயமாக நீங்கள் இதில் சீர்திருத்தம் செய்தால் நாம் எதிர்காலத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல், வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் அந்த வாக்குகளை பெற வேண்டும் என்று சொன்னால், நீங்கள் ஒரு தீர்க்கமான உறுதியான முடிவை எடுக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தை மனவுறுதியோடு எதிர்க்கின்ற தலைமைதான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்த வேண்டும். அப்படி யார் என்று பார்க்கின்றபோது கூட்டு தலைமையில் உயர்ந்து நிற்பவர் அண்ணன் எடப்பாடியார் என்கின்ற அந்த ஒற்றை கருத்து பெரும்பான்மையான கருத்தாக, 99 சதவீத கருத்தாக அங்கே முன்வைக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இந்த தாய் நாட்டு மக்கள் நமக்கு கொடுக்கின்ற ஆதரவை பெறுவதற்கு நாம் மன உறுதியோடு…..  நீங்கள் எண்ணிப் பாருங்கள், இந்த அரசியல் பொதுவாழ்க்கையில் பாசமிகு அண்ணன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் எடுக்கின்ற முடிவிலே ஒரு நாளும் பின் வாங்கியது கிடையாது. அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த முடிவில் உறுதியாக கடைசி வரை நின்று நிதானித்து பயணித்து அதில் தீர்வு கண்டிருக்கிறார் என தெரிவித்தார்

Categories

Tech |