அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற ஜி 7 நாடுகள் என அழைக்கப்படுகிறது. வருடம் தோறும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் இரண்டு நாட்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாநாடு தொடங்கியுள்ளது இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட ஜி 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடைபெற்றது.
இதில் உக்ரைன், ரஷ்யா போர் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஏழு நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற எரிபொருள் விநியோகத்தை சீரமைப்பது மற்றும் பணவீக்க உயர்வை கட்டுப்படுத்துவது போன்றவை பற்றி விவாதம் மேற்கொள்ளப்பட்டது. எரிபொருள் விலை உச்சவரம்பு நிர்ணயம் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமாக ரஸ்யாவுக்கு ஆபத்தை குறைக்க வியூகம் வகுக்கப்பட்டது. மேலும் பருவநிலை மாற்றம் குறித்து மாநாட்டில் பேசப்பட்டது.
அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி பேசியபோது, ரஷ்ய அதிபர் புதின் தொடங்கிய போரால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சவால்கள், பண வீக்கம் போன்றவற்றை எதிர்கொள்வது பற்றி மாநாட்டில் விவாதம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் புதினை எப்படி தொடர்ந்து பொறுப்புக்கு உள்ளாக்குவது என்பது பற்றியும் பேசுவோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று மாநாடு நடைபெறுகிறது. இன்றைய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார். மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாப்ஸ் கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று நேற்று முன்தினம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றுள்ளார்.
நேற்று ஜெர்மனியின் முனிச் நகரை அடைந்த போது பிரதமர் மோடிக்கு இந்திய தூதரும், இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். முனிச் நகரை அடைந்த உடன் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க முனிச் நகரை வந்தடைந்தேன். உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்துவதற்கு ஆர்வமாக இருக்கின்றேன். மேலும் பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல், பாலின சமத்துவம், ஜனநாயகம் போன்ற பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் பிரதமர் மோடி பிற நாடுகளில் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என மத்திய வெளிவருவத்துறை அமைச்சர் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்றைய மாநாட்டில் பருவநிலை மாற்றம் சுகாதாரம் போன்றவை தொடர்பாக ஒரு அமர்விலும், உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம் போன்றவை தொடர்பான மற்றொரு அமர்விலும் பிற தலைவர்களுடன் மோடி கலந்து கொள்கின்றார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நாளை ஐக்கிய அரபு அமீரகம் செல்கின்றார்.