Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlahNews: சென்னைக்குப் புறப்பட்டார் ஓ பன்னீர்செல்வம்…. !

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் சென்னை வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் தனது பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். முதலாவதாக அவரது பழைய இல்லத்தில்  இருந்து கிளம்பி,  அவர் புதிய வீட்டில் உள்ள தாயாரைச் சந்தித்து ஆசி பெற்று தற்போது சென்னை கிளம்பினார்.

சென்னை செல்லும் வழியில் அவர் மதுரை இறங்கியிருக்கிறார். மதுரையில் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் நடைபெறும் வைபவத்தில் கலந்து விட்டு 1  மணி விமானத்தில் சென்னை வருவார் என தெரிகின்றது. அதிமுக  தலைமையகத்தில் இபிஎஸ் அழைப்பின் பெயரில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வரும் நிலையில் ஓபிஎஸ் சென்னை கிளம்புவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |