தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குவதற்கு முன் இதற்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இணையத்தின் மூலம் அதனை விரைவாக செய்து கொள்ள முடியும். அதாவது இ சேவை மையத்தின் மூலம் செய்து கொள்ள முடியும். இருப்பினும் வீட்டில் இருந்தபடியே பெயர் சேர்த்தல் அல்லது நீக்க விண்ணப்பிக்க முடியும். அது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
- முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- பின்பு “பயனாளர் நுழைவு” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை, அங்குள்ள கட்டத்தில் நிரப்ப வேண்டும்.
- பிறகு கேப்ட்சா எண்ணைக் கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, “பதிவு செய்” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- உங்களுடைய மொபைலுக்கு ஓடிபி எண் வரும். அந்த எண்ணை உள்ளீடு செய்து, “பதிவு செய்” என்பதை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது குடும்ப நபர்கள், அட்டை எண், பெரியவர் அல்லது சிறியவர் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப அட்டை செயலில் உள்ளதா போன்ற விவரங்கள் அனைத்தும் உங்கள் திரையில் தெரியும்.
- பின்பு பெயர் நீக்கம் என்ற தேர்வை க்ளிக் செய்யவும். மற்றும் “புதிய கோரிக்கை’” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- குடும்ப அட்டை எண், குறியீடு எண் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின், “சேவையைத் தேர்வு செய்யவும்” என்பதை க்ளிக் செய்யவும். மேலும் கொடுக்கப்பட்டிருக்கும் சேவை தேர்வுகளில் “குடும்ப உறுப்பினர் நீக்க” / “குடும்ப உறுப்பினர் சேர்க்க” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில், தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும், அது “குடும்ப உறுப்பினர் நீக்க” / “குடும்ப உறுப்பினர் சேர்க்க” என்பதை வைத்து மாறுபடலாம். பின்பு “ஆவண வகையைத் தேர்ந்தெடுக்கவும்” தொடர்ந்து க்ளிக் செய்ய வேண்டும்.
- பின்பு ’உறுதிப்படுத்துதல்’ என்பதை டிக் செய்து, ’பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
மேலும் பிறகு 2-3 நாட்களுக்குள் பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் ஆகிவிடும். அதனை, அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.