லண்டனில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு லண்டன் நாட்டில் தாய் மசாஜ் செய்யும் நபரின் பெயர் மோங்கோன் தோப்வான் ஆவார். இவருடைய வயது 54. இவர் இருவேறு சமயங்களில் தன்னுடைய மசாஜ் பார்லருக்கு வரும் இரண்டு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி மசாஜ் செய்ய வந்த 20 வயதுடைய பெண்ணிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். அதனால் கைதான தோப்வான் நிபந்தனைக்குட்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி மீண்டும் மசாஜ் செய்ய வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார். இதனை தொடர்ந்து மீண்டும் தோப்வான் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர் செய்த தவறு ஊர்ஜிதமானது என்று தெரியவந்துள்ளது. எனவே நீதிமன்றம் அவருக்கு பதினோரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. இதுகுறித்து விசாரணை அதிகாரியான நடாலி விட் கூறியதாவது, “இதுபோன்ற தாக்குதலுக்கு ஆளான எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றர். மேலும் இந்த இரண்டு பெண்களின் தைரியத்தையும், துணிச்சலையும் அவர் பாராட்டியுள்ளார். ஏனெனில் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் குற்றவாளிக்கு நாங்கள் தண்டனை வாங்கி தந்திருக்க முடியாது. மேலும் தோப்வான் மிகவும் ஆபத்தான குற்றவாளி, அவருக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இனி வேறு யாரும் இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபடக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.