செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அழிப்பது என்பது அது நடக்காத விஷயம்.ஏழேழு ஜென்மம் இல்லை, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சரி முடியாது. இனி அதற்கென்று ஒருவன் பிறக்க வேண்டும் என சொல்வார்கள். அண்ணா திமுகவை அழிப்பதற்கு ஒருவனும் பிறக்க மாட்டான். திமுகவை அழிக்க நினைத்தவர்கள், அழிந்து போயுள்ளனர் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கின்றார். அவர் முக அழகிரியை மனதில் வைத்து தான் சொல்கிறார் என தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக பொதுக்குழு நடந்த நாளில், ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், பக்கத்தில் உள்ள இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கின்றது என்று தெரியும். அதைப்பற்றி பேச விரும்பவில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர் என தெரிவித்ததற்கு பதிலடியாக ஜெயக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.