அமெரிக்காவில் மராத்தான் போட்டியின் முடிவில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலன்.
அமெரிக்க நாட்டின் நியூயார்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் மே மாதம் 29-ஆம் தேதி பஃபலோ மராத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த ஒட்டப்பந்தைய வீராங்கனையான மேடிசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, “மராத்தான் போட்டியில் 26.2 மைல் இறுதிக் கோடு இருந்தது. இந்த தருணம் எனது சிறந்த நண்பருடனான எனது வாழ்நாள் முழுவதும் தொடக்கக் கோடாக மாறியது.
அவர் கையில் மோதிரத்துடன் ஒரு முழங்காலில், பந்தயத்தை முடிக்கும் வரை காத்திருந்தார். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், என்று கிறிஸ்டோபர் ஜேம்ஸ் கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் அவர் எவ்வாறு தனது முதுகெலும்பாக இருந்தார் மற்றும் பயிற்சி மற்றும் உள்ளடக்கத்தை கையாள்வதில் அவர் உதவியுள்ளார்” என்பதை அவர் எழுதியுள்ளார்.