Categories
தேசிய செய்திகள்

கேரளா: முதலமைச்சர் பாதுகாப்புக்காக… 33 லட்சம் ரூபாய் செலவில் கார்…. லீக்கான தகவல்…..!!!!

கேரள முதல்வர் பாதுகாப்பிற்காக 33 லட்சம் ரூபாய் செலவில் மேலும் ஒரு கார் வாங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவரது பாதுகாப்புக்காக நவீன வசதிகளுடைய மேலும் ஒரு கார் வேண்டும் என்று டி.ஜி.பி., அனில்காந்த் பரிந்துரை செய்து இருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் பாதுகாப்புக்காக 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள “கார்னிவல் லிமோசின்” என்ற கார் வாங்க கேரள உள்துறை செயலர் அண்மையில் ஒப்புதல் வழங்கினார்.

முதலமைச்சர் விஜயனின் பாதுகாப்புக்காக ஒரு “டாடா ஹாரியர்” மற்றும் 3 “இன்னோவா கிறிஸ்டா” கார்கள் வாங்க 6 மாதத்துக்கு முன் முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது டாடா ஹாரியருக்கு பதில் கார்னிவல் லிமோசின் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முன்பே கேரள அரசு நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடும்போது முதலமைச்சரின் பாதுகாப்புக்கு நவீனரக கார்கள் வாங்க எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Categories

Tech |