Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா படைத்த சாதனைகள்!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேஎல் ராகுல் 45 ரன்கள் விளாசியதையடுத்து, இருதரப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு  எதிராக நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்பட்டார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 45 ரன்களை விளாசினார். இதன்மூலம் இந்தத் தொடரில் இரண்டு அரைசதம் உட்பட 224 ரன்களை எடுத்துள்ளார். இருதரப்பு டி20 தொடரில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

சாதனை

இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2016ஆம் ஆண்டுதொடரில் கேப்டன் விராட் கோலி 199 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டில் 183 ரன்களை எடுத்திருந்தார். இதுவே சாதனையாக இருந்துவந்தது. தற்போது விராட் கோலி சாதனையை கேஎல் ராகுல் 224 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளார்.

Image result for கேஎல் ராகுல், ரோஹித் சர்மா"

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு காயம் ஏற்பட, அன்று விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் செயல்பட்டார். அதையடுத்து விக்கெட் கீப்பராகவே கேல் ராகுல் ஆடிவருகிறார். அந்தப் போட்டிக்கு பின் கேஎல் ராகுலின் ஆட்டம் மேம்பட்டுக்கொண்டே செல்வதால், கேல் ராகுல் விக்கெட் கீப்பராகவே தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் கேஎல் ராகுல் அடித்த ரன்கள்

இன்றையப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தசைபிடிப்பு காரணமாக ரிடையர்டு ஹர்ட்டாக, கேப்டன்சியையும் கேஎல் ராகுல் மேற்கொண்டார். மேலும் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |