அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி கட்சியை இரண்டாக இருக்கிறது. இருப்பினும் பல பிரச்சினைகளோடு அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டர். அதனைத் தொடர்ந்து அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ். துரோகத்தின் அடையாளம் ஓ பன்னீர்செல்வம். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 11ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்றுஅவர் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட ரீதியாக இந்த கூட்டம் நடைபெற்றது என்றும் கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பொன்னையன் கூறினார்.