கன்னியாகுமரி ராஜசங்கீதா தெருவில் எழில்குமார் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த முடித்துவிட்டு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே ஹோட்டலில் இந்தோனேசியாவே சேர்ந்த ரினாவதி ராஸ்மான்(31) என்பவர் வேலை செய்து வருகிறார். இருவரும் அடிக்கடி பேசி பழக்கமாகி வந்தனர். நாளடைவில் காதலாக மாறி கடந்த 11 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமண பந்தலை இணைய முடிவு செய்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படி கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று காலை எழில்குமார் அமலன்- ரீனாவதி ராஸ்மன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சி இரண்டு பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். .
Categories